சோமாலியா பயங்கரவாதிகள் முகாம்மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்: 60 பேர் பலி

வாஷிங்டன்:

சோமாலியாயில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் முகாம்மீது அமெரிக்கா அதிரடியாக வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில், 60 பயங்கரவாதிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சோமாலியா நாட்டில் அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அல் கொய்தா ஆதரவுவுடன், சோமாலியான நாட்டு பயங்கரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள்  அரசுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த குழுக்களின் முகாம் தலைநகர் மொகடிஷு அருகேசெயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சோமாலியா அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் பயங்கரவாதிகள் முகாம் மீது திடீர் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகனில் இருந்து வெளியாகும்  செய்திகள் தெரிவிக்கின்றன.