அமெரிக்கா: யூத ஜெயக்கூட்டத்தில்  துப்பாக்கிச்சூடு 11 பேர் பலி

மெரிக்காவில், பிட்ஸ்பர்க் நகரில் யூத ஜெபக்கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ளது பிட்ஸ்பர்க் நகரம். இங்குள்ள யூத ஜெபக்கூடத்தில் நேற்று வழக்கமான பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று கூட்டத்தினரை  நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இதையடுத்து கூட்டத்தினர் பயத்தில் அலறி அடித்தபடி சிதறி ஓடினர். இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாகப் உயிரிழந்தார்கள்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்  காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த மர்ம நபரை நோக்கி தாக்குதல் நடத்தினர். அவரும் பதிலுக்கு சுட்டதில் காவல் அதிகாரிகள் மீதும் குண்டு பாய்ந்தது. பிறகு அந்த மர்மநபரை சுட்டு, பிடித்தனர்.

காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில் அவர் பெயர் ராபர்ட் போவர்ஸ் என்பது தெரியவந்துள்ளது. என்ன நோக்கத்துக்காக இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. இதுபற்றி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சுடு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கண்டனத்தையும்  இரங்கலையும் தெரிவித்துள்ளார். இது கொடூரமான சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.