ரஷ்ய ஏவுகணைகளை இந்தியா வாங்கினால் பொருளாதாரத் தடை : அமெரிக்கா

வாஷிங்டன்

ஷ்யாவிடம் இருந்து இந்தியா எஸ் 400 ஏவுகணகளை வாங்கினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்க பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

வரும் ஜூலை 6 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் இந்தியாவுடன் இருமுனை சந்திப்பு ஒன்று நடைபெற இருந்தது.   இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்பங்கு பெற இருந்தனர்.   இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு செயலர் மைக்  தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக சுஷ்மாவிடம் தெரிவித்துள்ளார்.    அந்த காரணங்கள் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எஸ் 400 ஏவுகணைகளை ரூ.40000 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் இட்டுள்ளது.   இந்த ஏவுகணைகள் சுமார் 400 கிமீ தூரமுள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டவை.   அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகள் 70 கிமீ தூரமுள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டவை.   அதனால் இந்திய விமானப்படை அமெரிக்க ஏவுகணைகளுக்கு பதில் ரஷ்ய ஏவுகணைகளை தேர்ந்தெடுத்தது.

ஏவுகணைகள் வாங்கும் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் வட கொரியாவுகும் அமெரிக்கா ஒரு சில தடைகள் விதித்திருந்தது.   ஆனால் அது போல இந்தியாவுக்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் இருந்தது.    இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறாவு உள்ளதால் இந்த உரிமையை அமெரிக்கா அளித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் செனட் என கூறப்படும் அமெரிக்க பாராளுமன்றம் கூட்டம் ஒன்றினை கூட்டி இந்தியா – ரஷ்யா ஏவுகணை ஒப்பந்தம் குறித்து விவாதம் நடத்தியது.    ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா கூறி இருந்தது.  தற்போது செனட் சபையில் இந்தியாவுக்கு ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க தடை விதிக்க தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணைகள் வாங்கினால் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்தும் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்கனவே சில ஒப்பந்தங்கள் உள்ளன.    அவை குறித்து விவாதிக்க இருந்த இந்திய அமைச்சர்கள் இருவரது சந்திப்பையும் அமெரிக்கா ரத்து செய்துள்ளது.