சீனாவுக்கு அணுசக்தி தொழில் நுட்பம் வழங்க மாட்டோம் : அமெரிக்கா

வாஷிங்டன்

சீன நாட்டுக்கு இனி அணுசக்தி தொழில் நுட்பம் வழங்கப்போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் நிகழ்ந்து வருவது தெரிந்ததே. சீனா சட்ட விரோதமாக தொழில் நுட்பங்க்ளை திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அத்துடன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியது. அதை தொடர்ந்து சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தியது.

தற்போது சீனாவின் மேல் அடுத்த கட்ட நடவடிக்கையை அமெரிக்காவை ஆளும் டிரம்ப் அரசு எடுத்துள்ளது. அமெரிக்காவின் எரிசக்தித்துறை அமைசர், “அமெரிக்காவிடம் இருந்துஅணுசக்தி தொழில் நுட்பத்தை சீனா பெற்றுள்ளது. அதன் மூலம் தென் சீன கடற்பகுதியில் பல செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கு அணுசக்தி நிலையங்களை உருவாக்கி வருகிறது

இது உலக நாடுகள் அனைத்துக்கும் அச்சுறுத்தலை விளைவிக்கும் செயலாகும். இதை தடுக்க இனி அந்நாட்டுக்கு அணுசக்தி தொழில் நுட்பம் வழங்குவதை அமெரிகக நிறுத்திக் கொள்ள் அமுடிவு செய்துள்ளது. இதன் மூலம் எங்கள் நாட்டில் உள்ள தொழில்துறைகள் பாதிக்கப்பட்டாலும் நாங்கள் அது குறித்து கவலைப்பட போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: US to stop giving atomic technology to china
-=-