சீன தயாரிப்பு மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு தடை? அமெரிக்கா ஆலோசனை

 வாஷிங்டன்:

மெரிக்கா சீனா இடையே வர்த்தகப்போர் நீடித்து வரும், சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் பஸ் கார் போனற் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ய அமெரிக்க தடை செய்ய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் 2 நாள்  ஜி-20 உச்சி  மாநாட்டில் அமெரிக்கா, சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் இரு நாட்டு தலைவர்களும் பேசி சமாதானமாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் மேலும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில், சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவேய் நிறுவனம் மீது குற்றம் சாட்டி, அதை கருப்பு பட்டியலில் வைக்க அமெரிக்கா திட்டமிட்டு, பின்னர் வாபஸ் பெற்றது.

இந்த நிலையில்,  சீனாவில் இருந்து இறக்குமதி  செய்யப்படும் பஸ் மற்றும் குறிப்பிட்ட சில கார்களை உள்பட பல மோட்டார் வாகனங்களை தடை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவை உளவு பார்க்கும் நோக்கில்,  சீன வாகனங்களில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மோட்டார் வாகனங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போரைமேலும் தீவிரமாக்கும் என உலக நாடுகள் கவலைகொண்டுள்ளன.