விசா : இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்காவின் புதிய விதி

வாஷிங்டன்

று இஸ்லாமிய நாட்டு மக்களுக்கு விசா வழந்த புதியதாக ஒரு அடிப்படை விதியை அமெரிக்க அரசு விதித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்ததும் இஸ்லாமியர்களுக்கு விசா வழங்கும் விதிமுறைகளை மாற்றி அமைத்தார்.  விதிகள் மிகவும் கடுமையானது.  பலரும் இதை இஸ்லாமியர் அமெரிக்கா வருவதை தடை செய்யவே இவ்வாறு மாற்றப்பட்டதாக கருதினர்.

தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்ததாவது:

அமெரிக்க உச்ச நீதி மன்றத்தின் ஆணைக்கிணங்க, இப்போது  அடிப்படை விதிகள் மாற்றப்பட்டுள்ளன.  அதன்படி, ஆறு இஸ்லாமிய நாடுகளில் உள்ளோர், அமெரிக்கா வரவேண்டும் என்றால் அவர்களின் நெருங்கிய உறவினரான பெற்றோர், மனைவி/கணவன், குழந்தைகள், வயது வந்த மகன், மகள், மருமகன் அல்லது மருமகள் அமெரிக்காவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

தாத்தா, பாட்டி, அத்தைகள், மாமன்கள், பெரியப்பா அல்லது சித்தப்பாக்கள், பெரியம்மா அல்லது சித்திகள், மைத்துனன்கள் அல்லது மைத்துனிகள் போன்றோர் நெருங்கிய உறவினராக கருதப்பட மாட்டாது.

இந்த விதியானது நெருங்கிய உறவினரைக் கான அமெரிக்கா வரவிரும்புபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.   பணி புரிய அல்லது பணி நிமித்தமாக வருவோர்க்கு இந்த விதிகள் செல்லாது

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.