தன் பாலின இணை தம்பதிகளுக்கு விசா கிடையாது: அமெரிக்கா அதிரடி

வாஷிங்டன்:

ன் பாலின இணை தம்பதிகளுக்கு விசா கொடுக்கப்பட மாட்டாது என்று அமெரிக்க குடியுரிமைத் துறை தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் தன் பாலின ஜோடிகள் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவிலும் இது சட்டப்பூர்வமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டை சேர்ந்த தன்பாலின ஜோடிகளுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்கா அறிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு ஒபாமா அமைச்சரவையில் அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் இருந்தபோது, வெளிநாட்டை சேர்ந்த தன் பாலின இணைகளுக்கும் விசா வழங்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டது.  அதுபோல,  வெளிநாட்டில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்கா அழைத்டு வந்து வேலை மற்றும் படிப்பினை பெறலாம் என்பதற்காக எச்4 என்ற விசா முறை அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விசா நடைமுறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.

எச்-1பி விசா முறையில் பல திருத்தங்களை டிரம்ப் தலைமையிலான அரசு கொண்டு வரும் நிலையில், ஜி-4 விசாவிலும் திருத்தங்கள் செய்துள்ளது. மேலும், தற்போது எச்4 இஏன  விசா முறையினை 3 மாதத்தில் திரும்பப் பெறுவோம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்தால்,  எச்-4 விசா கீழ் 90 சதவீதம் இந்தியர்களும், 5 சத வீதம் சீனர்களும், 5 சதவீதம் மற்ற நாட்டினரும் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.

அதேவேளையில் தனிபாலின ஜோடிகள் அமெரிக்காவில் நுழையவும் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜி4 விசா வாயிலாக சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றி வரும்  ஊழியர்கள்,  அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வெளியேற்றப்படும் சூழல் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அமெரிக்க அரசு, சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்களுக் காக, ஒரே பாலின உள்நாட்டு பங்காளிகளுக்கு, G-4 விசாவை வழங்காது என்று கூறுகிறது.

மாறாக, ஐக்கிய மாகாணங்களைச் சார்ந்த தூதரகங்களின் ஒரே பாலினப் பங்காளிகள் அத்தகைய விசாக்களுக்கு தகுதியுடைய திருமணத்திற்கு சான்று வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: US Won't Grant Diplomatic Visas To Same-Sex Partners: Officials, தன் பாலின இணை தம்பதிகளுக்கு விசா கிடையாது: அமெரிக்கா அதிரடி
-=-