வாஷிங்டன்:

மெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றபிறகு, இனவெறி தாக்குதல் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்பம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளுக்கு தடை, விசாவில் பல கட்டுப்பாடுகள் போன்ற பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

அவரது அறிவிப்புகள் அனைத்தும் அமெரிக்கர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாட்டினர் மீது இனவெறி தாக்குதல் மீண்டும் தொடங்கி உள்ளது.

சில நாட்களுக்கு முன், இந்திய பொறியாளர் ஒருவரை  அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் “அமெரிக்காவை விட்டு வெளியேறு” என்று சத்தமிட்டபடியே, இனவெறியன் ஒருவன் துப்பாகியால் சுட்டுக்கொன்றான்.

இந்த செயல் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த துயர சம்பவம் நடைபெற்று ஒருசில நாட்களுக்குள் மீண்டும் ஒரு இனவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தியா வம்சாவெளிப் பெண் ஒருவர் மீண்டும் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார்.

நியூயார்க்கில் வசித்து வரும்  இந்திய வம்சாவளிப் பெண் ஏக்தா தேசாய். இவர் கடந்த ஃபிப்ரவரி 23-ம் தேதி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது சக பயணியான ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர், ஏக்தா தேசாயை “நாட்டை விட்டு வெளியேறு” என்று மிரட்டியுள்ளார். மேலும் கடுமயைக வசைபாடியுள்ளார்.

இதை  வீடியோவாக எடுத்த ஏக்தா, அதை  சமூக ஊடகத்தில் வெளியிட்டார். அது இப்போது வைரலாகியுள்ளது. மேலும், ஏக்தா இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளது.