வாஷிங்டன்,

மெரிக்க ராணுவ பயன்பாட்டுக்கான பிரத்யேக விண்கலம் செலுத்தி உள்ளது. டெல்லி 4 என்ற விண்கலம் ராக்கெமூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.

அமெரிக்காவின்  ஃபிளாரிடாவில் உள்ள கேப் கேனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து WGS-9 செயற்கைக்கோளுடன் டெல்டா 4 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணைநோக்கி பாய்ந்தது.

இந்த டெல்டா4 விண்கலம் முழுக்க முழுக்க ராணுவ பயன்பாட்டுக்காக மட்டுமே ஏவப்பட்டுள்ளது என்றும்த,  ராணுவ வீரர்களை தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஏவப்பட்டுள்ளது.

ஏற்கனவே 10 செயற்கைக்கோள்களை புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்த நாசா  முடிவு செய்துள்ளது. இதில் 8 செயற்கைகோள்கள் ஏற்கனவே விண்ணில் நிலைநிறுத்தபபட்டுள்ளது. இந்நிலையில்  9வது செயற்கைக்கோளான டெல்டா4 தற்போது விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த 10வது செயற்கைகோள்,  அடுத்த ஆண்டு ஏவப்படும் என்றும், கப்பல்கள், விமானங்கள், ராணுவ முகாம்கள் போன்ற இடங்களில் உள்ள வீரர்களுடன் ராணுவத் தலைமையகம், அமெரிக்க அதிபர் மாளிகை, வெளியுறவு அமைச்சக அலுவலகம் ஆகியவை விரைவில் இணைக்கப்படும் எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.