அமெரிக்கா: பிரீமியம் எச்-1பி விசாக்களுக்கு 6 மாதம் தடை..!

வாஷிங்டன்,

மெரிக்காவில் எச்1பி விசாக்களுக்கு 6 மாதம் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு அறிவித்து உள்ளது.

எச்-1பி விசாவுக்கு அதிக எண்ணிக்கையுள் வந்துள்ளபடியால் விசா நடைமுறைகள் தேக்கம் அடைந்துள்ளது. அதை சரி செய்ய 6 மாதம் அவகாசம் தேவைப்படுவதால், 6 மாதத்திற்கு பிரிமியம் எச்1பி விசாக்களுக்கு மட்டும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பிரிமியம் விசா மூலம் நிறுவனங்கள் வேகமாக விசாக்கள் பெற முடியும். தற்போது டிரம்ப் அரசு பிரீமியம் விசா விண்ணப்பங்களுக்கு 6 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு கூறியிருப்பதாவது,

அமெரிக்காவில் எச்-1பி விசா வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கவில்லை. பிரீமியம் முறைக்கு மட்டுமே 6 மாத காலம் இடைக்கால தடை விதித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும், சாதாரணமாக எச்1பி விசா பெறுவதற்கும், பிரிமியம் முறையில் விசா பெறுவதற்கும் வேறுபாடு உள்ளது.

விரைவாக விசா பெற இந்த பிரிமியம் விசா முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த பிரீமியம் விசாக்களை பெற, நிறுவனங்கள் 1,125 டாலர்கள் வரை கூடுதல் கட்டனம் செலுத்த வேண்டும். இதன் காரணமாக, வழக்கமான எச்-1பி விசா வழங்குவதை விட, பிரிமியம் முறையில் விரைவான சேவையை பெற முடியும்.

இப்படி கூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயர் எச்-1பி விசா பெற பட்டியலில் முதல் இடத்திற்கு சென்று விடும்.

தற்போது இந்த பிரிமியம் முறைக்கு மட்டுமே 6 மாத காலம் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால தடையின் மூலம் வழக்கமான எச்-1பி விசா வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு தெரிவித்துள்ளது.

வழக்கமாக எச்-1பி விசாவிற்கு விண்ணப்பம் செய்தால், விசா பெறுவதற்கு குறைந்தது 3 மாதம் கால அவகாசம் ஆகும். ஆனால் பிரீமியம் முறையில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது 15 நாட்களில் விசா பெற முடியும். நமது நாட்டில் தக்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவது போன்றே அமெரிக்க எச்1பி விசா பெற பிரிமியம் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடை வரும் ஏப்ரல் மாதம் 3 தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியா போன்ற வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும்போது, வேலைக்கு அழைக்கும் நிறுவனங்கள் பிரிமியம் முறையில் விசா பெற்று உடனடியாக அவர்களை அழைத்துச்செல்லும்.

தற்போது தடை விதிக்கப்படுவதால், அமெரிக்காவுக்கு வேலை செல்பவர்களுக்கு நடைமுறை சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.