அமெரிக்காவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 1.94 கோடி பேருக்கு கொரோனா தொற்று

வாஷிங்டன்: அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

அமெரிக்கா நாடானது உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிப்பு, பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.

அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று வரை 1 கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 396 ஆக உள்ளது. இந்த தகவலை  ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று புதிய உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி, 1 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கடந்த வாரத்தில் சராசரியாக இந்த எண்ணிக்கை நாளொன்றுக்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 272 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.