அமெரிக்கா: சிறிய விமானங்கள் நடுவானில் மோதல்! 3 பேர் பலி!!

கேரோல்டன் :

மெரிக்காவில் சிறிய வகை இரண்டு  விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளனது.. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாகாணம், கேரோல்டன் நகர விமான நிலைய ரன்வேயில், இரு சிறிய ரக விமானங்களும் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றபோது நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

air-crash

இதில் இரு விமானங்களும் மோதி விழுந்து நொறுங்கின. இவ்விபத்தில் ஒரு பெண் பயிற்சியாளர் உட்பட 3 பேர் பலியாயினர்.

மோதிய  இரண்டு விமானங்களும் ஒன்றை என்ஜினுடன் கூடிய Diamond DA20C1   மற்றும்  Beech F33A விமானங்கள் ஆகும்.

இதுகுறித்து பாதுகாப்புதுறை தலைவர்  ஸ்காட் புளூ கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து, முழுமையான விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் எனத் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி