வெல்ல முடியாத வீரர் என்றும் ஓட்டப்பந்தயத்தின் மன்னன் என்றும் புகழப்படும் தடகளவீரர் உஸைன் போல்ட், போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.
1
ஜமைக்கா நாட்டின் 30 வயது தடகள வீரரர் உஸைன் போல்ட். கடந்த மூன்று ஒலிம்பிக்கிலும் (சீனா, லண்டன் மற்றும் பிரேசில்) தொடர்ந்து நூறு மீட்டர், இரு நூறு மீட்டர் மற்றும் 4X100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்று சாதனைப் படைத்தவர் இவர்.
கடந்த பத்து ஆண்டுகளாக, உலக ஓட்டப் பந்தயத்தில் வரலாற்றில் தனிக்காட்டுராஜாவாக விளங்குகிறார் உஸைன் போல்ட். புகழின் உச்சத்தில் இருக்கும் உஸைன் போல்ட்,  தான் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று தீர்மானித்திருக்கிறார்.
பிரிட்டனில் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை உலக சாம்பியன்ஷிப் தொடர் நடக்க இருக்கிறது. அதில் பங்குபெறும் உஸைன் போல்ட், அத்துடன்  தனது ஓட்டப்பந்தய போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே அடுத்த வரும் ஜூன் மாதம் அவரின் சொந்த நாடான ஜமைக்காவில் ”ரேசர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்” நடைபெற இருக்கிறது. இதுதான் அவரது சொந்த ஊரில் ஓடும் கடைசி ஓட்டம்.