நியூயார்க்: 2008ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் 100 மீ. இறுதிப்போட்டியில், தனக்கும் பிற வீரர்களுக்கு இருந்த இடைவெளியைக் குறிப்பிட்டு, இதுதான் சமூக விலகல் என்று சற்று நகைச்சுவையாக டிவீட்டியுள்ளார் முன்னாள் ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட்.

இவரது டவீட் தற்போது வைரலாகி வருகிறது மற்றும் அதிகளவில் ரிடிவீட் செய்யப்படுகிறது.

கடந்த 2008ம் ஆண்டு முதன்முதலாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற போல்ட், 100 மீ. இறுதிப்போட்டியில், வெறும் 9.69 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து ஒலிம்பிக் சாதனைப் படைத்தார். எல்லைக் கோட்டைத் தொடுகையில், அவருக்கும் பிற வீரர்களுக்கும் தூரம் அதிகமிருக்கும்.

அந்தப் படத்தையே இப்போது அவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளதுடன், இதுதான் சமூக இடைவெளி (கொரோனா தொடர்பாக) என்று சுவாரஸ்யம் கலந்து நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.