உசைன் ‘மின்னல்’ போல்ட் பங்கேற்கும் கடைசி  ஒலிம்பிக் :ரியோ-2016

boltfeatured

இந்த ஆண்டு ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கே தான் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் என்பதை ஜமைக்காவின் உசைன் போல்ட் உறுதிப் படுத்தியுள்ளார். டோக்கியோவில் 2020 விளையாட்டுகள் வரை தனது பயணத்தை விரிவாக்கும் சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்துவிட்டதாகவும், தனது உடற்பயிற்சி ஜப்பான் டோக்யொ வரை கொண்டு சென்றுவிடும் என அவரது பயிற்சியாளர் கிளென் மில்ஸ் தெரிவித்த நம்பிக்கை, ஜனவரி மாதம் வரை அவரது ஒலிம்பிக் வாழ்க்கையை நீடிக்கும் வாய்ப்பை உயர்த்தியது.

எனினும், போல்ட் AFP-யின் துணை நிறுவனமான எஸ்.ஐ.டி.-க்கு அளித்த பேட்டியில் “ ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் போட்டியுடன், என் ஒலிம்பிக் வாழ்க்கைக்கு திரை விழும். எனவே இந்தப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்கள் வாங்க இலக்குக் கொண்டுள்ளேன்” என்று கூறினார்

“அது நிச்சயமாக என் கடைசி ஒலிம்பிக்காக இருக்கும். எனக்கு இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு இதே உத்வேகத்துடன் இருப்பது மிகவும் கடினமாக இருக்கும்” என்றார்.

2008 மற்றும் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் அவரது ஆச்சர்யம் தரும் திறமையின் வெளிப்பாட்டால், ஏற்கனவே ஆறு தங்கப் பதக்கங்களை போல்ட் வென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஏற்கனவே அவர் பலமுறை, “லண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப்-2017 க்குப் பிறகு தாம் ஓய்வு பெறுவதென முடிவுசெய்துள்ளதாக கூறியுள்ளார்.

ரியோவில் நடைபெறும் போட்டியில் மீண்டும் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெறுவதெ தம்முடைய லட்சியம், கனவு என்றும் அதற்காகவே கடுமையாக பயிற்சி செய்து வருவதாகவும் உசைன் போல்ட் கூறியுள்ளார்.

ஆகஸ்டில்-2016ல் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் போது, தம்முடைய பதக்க எண்ணிக்கையை ஒன்பதாக உயர்த்திவிடுவதில் நம்பிக்கையுடன் உள்ளார்.

2009 ல் பேர்லினில், இருநூரு மீட்டர் போட்டியில் 19.19 வினாடியில் ஓடிச் சாதனைப் படைத்த போல்ட், தாம் ஓய்வுப்பெறுவதற்குள், இருநூரு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 19 வினாடிக்குள் ஓடிக் கடந்து புதிய சாதனைப் படைக்க வேண்டும் எனும் தம்முடைய ஆசையை கோடிட்டுக் காட்ட மறக்கவில்லை.

“நான் 19 வினாடிக்குள் 200 மீட்டர் கடக்க முயற்சி செய்ய விரும்புகிறேம். உண்மையில், அது என் இலக்கு. அதனை அடைய விரும்புகின்றேன்” என்றார் முத்தாய்ப்பாக.

அவரது சாதனை விவரம் பின்வருமாரு:

· 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில்9.69 நொடிகளில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை புரிந்தவர்.

· அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்;

· தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.

· 2003ல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்),

· ஒன்பது முறை உலக முதன்மை வீரன்,

· ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர்,

இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சேரும்.

இந்த மின்னல் வேக மனிதன் இச்சாதனையை அடைவது சாதியம். அவரது கடந்த காலச் சாதனையைப் பற்றி தெரிந்தவர்கள் சொல்வதும் அதுதான்.

You may have missed