Random image

ஜப்பான்: ஆன்லைன் நிறுவனத்தை ஹேக் செய்து ரூ.430 கோடி கொள்ளை

ஜப்பானில் பணபரிவர்த்தனை ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு 60 மில்லியன் டாலர்கள்(ரூ.430 கோடி) திருடப்பட்டது.

currency

ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் மிகப்பெரிஅ மையமாக ஜப்பன் திகழ்கிறது. உலகின் முதல் 10 நாடுகளின் பணப்பரிவர்த்தனையை ஜப்பான் செய்து வருகிறது. ஜப்பானில் உள்ள பெரும்பாலான நிறுவங்கள் பிட்காயினை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை செய்து வருகிறது.

இந்நிலையில் ஒசாகாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் ஆன்லைன் பணபரிமாற்ற நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களின் கணக்குகளை சரிபார்க்கும் சர்வர் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலர் திருடப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ரூ.430 கோடி திருட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

” இப்பணம் முற்றிலுமாக வேறொருவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது, வாடிக்கையாளரின் கணக்கை முறைகேடாக எப்படி பயன்படுத்த முடிந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள கோரியுள்ளோம், இதில் மோனோகாயின், பிட்காயின், பிட்காயின் பணம் ஆகியவைற்றையும் திருடியுள்ளனர் “ என்று அந்நிறுவனத்தின் தலைவர் சாயிப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ‘‘வாடிக்கையாளர்களின் சொத்துக்கள் பாதிக்கப்படாது என்பதற்காக நிறுவனத்தின் பெயரை வெளியில் சொல்ல விரும்பவில்லை. எங்களின் மிகப்பெரிய பங்குதாரரான பிஸ்கோ குழுமத்தினர் இருப்பதால் எங்களுக்கு பொருளாதார ஆதரவு இருப்பதால் தற்போதைக்கு இப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று நம்புகிறோம்.

எனினும் வாடிக்கையாளர்களின் சொத்துக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் ” என்று கூறினார்.

ஒசாகா பணப்பரிவர்த்தனை நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள ஹேக்கிங் சம்பவத்தை அடுத்து, அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.