குழந்தைகள் மருந்து சாப்பிட, குளிர்பான பாட்டில்களில் ஊற்றிக் கொடுக்கலாமா? மருத்துவர் பதில்

நெட்டிசன்:

Dr.Safi முகநூல் பதிவு….

ஒரு முகநூல் நண்பர் Selva Murali நேற்று இந்த காணொலியை அனுப்பி கேட்ட கேள்வி ?

அந்த காணொளி….

சார்
இதுபோன்ற குழந்தைகளை ஏமாற்றும் வித்தைகள் தவறு தானே ?

எனது பதில் :

நிச்சயமாக தவறல்ல சார் ,

காரணம் ,

பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தை அது வளர , அதன் அன்றாட தேவைக்கு சக்தி பெற , நாவின் ருசி அறியாது பாலை குடித்து வளர ஆரம்பிக்கும் 6 மாதம் முதல் தமக்கு தரப்படும் ஒவ்வொரு விதமான உணவுகளையும் , தனித்தனியே ஆராய்ந்து உண்ண ஆரம்பிக்கும் , கொடுக்கும் உணவு அனைத்த்தையும் முதலில் துப்பிவிடும் ,

இதன் காரணம் , உணவு பிடிக்காததால் அல்ல , அது உணவு , அதை நாம் உண்ணவேண்டும் என அறியாததால் அந்த நேரத்தில் பெற்றோருக்கு வரும்.குழப்பம் தான் உணவு மாற்றுகள்; இங்கே தான் ஆரம்பிக்கிறது ஜன்க் எனும் குப்பை உணவுகளின் தொடக்கம் , அதிலிருந்து குழந்தை சுவையை உணர ஆரம்பித்துவிடுகிறது , தாம் என்ன உண்ண வேண்டும் என அனைவருக்கும் குழந்தை கட்டளை போடும் , இதுதான் எனக்கு பிடிக்கும் என அனை வரையும் நம்பிட வைக்கும் , இதெல்லாம் எனக்கு பிடிக்காது என உடல்மொழியாலேயே சொல்ல முனையும், உடனே நம் தாய்மார்களும் , கடைகளில் உள்ள பிஸ்கட், பால் பவுடர் , குழந்தை உணவு மாற்றுகள் , தேனீர் , காபி , என அனைத்தையும் கொடுக்க ஆரம்பிப்பர் ,

அங்கே தான் பிஞ்சு குழந்தைகளின் உணவு பழக்கங்கள் திசைமாறும் , மேலும் , சின்ன சின்ன நோய் நேரங்களில்
மருந்து உண்ண நடக்கும் போராட்டங்களும் மிக பெரியது , ஆதலால் நான் அவருக்கு அளித்த பதில் இதோ
1. குழந்தையின் நோய் குணமாக வேண்டும்
2. பல குழந்தைகள் மருந்து உண்ண அடம்பிடிப்பதால் நோயின் வீரியம் முற்றி அடுத்த நிலைக்கு போகும் ,
3. இதுபோன்ற குளிர்பான பெட்டிகளில் ஊற்றி தருவதால் அவையும் மருந்து தான் போல என நினைத்து இனி இந்த அவசியமற்ற சர்க்கரை கலசல் நீர்களையும் குழந்தைகள் புறக்கணித்து விடும்..!

ஆகவே

இது ஏமாற்று அல்ல,

இந்த வயதில் இந்தவகை நன்மையான ஏமாற்றுக்களை நாம் செய்யாமல் விட்டால் , அக்குழந்தை நம்மை ஏமாற்றி , தம் ஆரோக்கியத்தையும் மோசமாக்கி வளரும்…. மொத்தத்தில் அனைத்தும் நல்லதே !!

கார்ட்டூன் கேலரி