யனர் தனியுரிமை கொள்கை : கடுமையான விதிமுறைகளை விதிக்க உள்ள நிலையில் இப்போதே அந்நிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன

இந்திய ரிசர்வ் வங்கி (RBI)  கடந்த ஆண்டு அந்நிய பண பரிமாற்ற நிறுவனங்ககளின் இந்தியப் பிரிவு இந்தியா சம்மந்தமான தரவுகளை இந்தியாவில் தான் சேமிக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்து.

ஆனால் அப்போதே மாஸ்டர் கார்டு நிறுவனம் ஆர்பிஐயின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அந்நிய பணபரிமாற்ற  நிறுவனங்களால் தரவு சேகரிப்பு சம்பந்தமான கோரிக்கை களை  இந்தியா  பரிசீலனை செய்யும் என்று  அரசாங்கம் கூறியுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக அழுத்தங்கள் அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில், விதி களை மறுஆய்வு செய்யும் முடிவு வருகிறது. இந்தியாவிற்கு  முக்கிய வர்த்தக சலுகைகளை  அமெரிக்கா திரும்ப  பெற்றதை அடுத்து, ஞாயிறன்று சில அமெரிக்கபொருட்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்தது குறிப்பிடத்தக்கது

கடந்த திங்களன்று(17.06.2019) வணிகத் துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் அரசின் கட்டுப்பாடுகள் குறித்தும் விவாதித்தனர் இந்த சந்திப்பில் மாஸ்டர்கார்ட் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பங்கியா, காணொலி கலந்துரையாடல் மூலம் இக்ககூட்டத்தில் கலந்துகொண்டார் என்றும் அரசு தரப்பில் தெரவிக்கப்பட்டிருந்தது.

தரவு சேகரிப்பு விதிகளை  இந்தியாவும் மிகவும் கடுமையான  கட்டுப்பாடுகளை விரும்புகிறது,  இந்தியாவில் அத்தகவல் சேமிக்கப்படும்போது  தரவை அணுக மற்றும் தேவை எழும் போது ஆய்வுகள் நடத்த முடியும். ஆனால் தொழில் நுட்ப நிறுவனங்களோ  இந்திய அரசின் இந்த விதிகளுக்காக தங்கள் வியாபார உத்திகளை மாற்றி திட்டமிட்ட முடியாது என்றும் , செலவுகளை மேலும் உயர்த்தும்  என்றும் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இந்திய வர்த்தக குழுக்களும், உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளும் ஏற்கனவே இத்தகைய விதிகள் பற்றி கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவுவதற்கு மட்டுமல்ல, இந்திய பயனாளரகளின் தரவுகளைப் பாதுகாக்கவும், பயனாளர்களின்  தனியுரமையை  பாதுகாப்பதற்கும், எல்லைகளைக் கடந்து தரவுகளை  உடனடியாக  பெறுவதற்கு நாங்கள் முயற்சிப்போம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போபெரோ கடந்த வாரம் தெரிவித்திருந்தார் தகவல் வகைப்படுத்தல் தொடர்பாக மேலும் தெளிவு பெற வேண்டும் என அமைச்சர் கோயல் இடம்  தொழில்நுட்ப நிறுவனங்கள் திங்களன்று கோரிக்கை விடுத்தன.

அதே சமயம் வர்த்தக அமைச்சர் திரு.கோயல் தொழில்துறையின் ஒவ்வொரு கவலையும் நிவர்த்தி செய்யப்படும் என  தொழில்நுட்ப நிறுவனத்தின்  பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்

-செல்வமுரளி