ரெயில்களுக்கு எரிபொருளாகும் இயற்கை வாயு….பல கோடி ரூபாய் மிச்சமாகும்

டில்லி:

செலவை குறைப்பதற்காக இயற்கை வாயுவை எரிபொருளாக பயன்படுத்த ரெயில்வே முடிவு செய்துள்ளது.

டீசல் போன்ற திரவ வடிவிலான எரிபொருள் பயன்படுத்துவதில் இந்தியன் ரெயில்வே உலக அளவில் 3ம் இடத்தில் உள்ளது. இதில் சில பிரிவுகள் இயற்கை வாயுவை எரிபொருளாக பயன்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ரெயில்வேயின் உற்பத்தி மற்றும் பணிமனைகளில் இயற்கை வாயுவை பயன்படுத்துவது லாபம் தரும். ஏனெனில் அது மற்ற மாற்று எரிபொருள்களை விட 25 சதவீத விலை குறைவு.

2019ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து 54 பணிமனைகளையும் இயற்கை வாயுவை பயன்படுத்தும் முயற்சியில் ரெயில்வே ஈடுபட்டுள்ளது.

ஆண்டுதோறும் 300 கோடி லிட்டர் டீசலை எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு சிறிய அளவே இயற்கை வாயுவால் பயன்படுத்தும்படி மாற்றப்படும் ரெயில்வே மாற்று எரிபொருள்களுக்கான தலைமை நிர்வாகி சேத்ரம் தெரிவித்துள்ளார். இயற்கை வாயுவை பயன்படுத்தினால் ஆண்டிற்கு ரூ.17 கோடி மிச்சமாகும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.