திமுக வா? அதிமுக வா? : வண்ணத்தில் குழப்பம் செய்த போஸ்டர்

துரை

துரை நகரில் திமுக வின் வண்னத்தில் ஒட்டப்பட்டிருந்த அதிமுக போஸ்டர் தொண்டர்களிடையே குழப்பத்தை உண்டாக்கியது.

எது நடந்தாலும் போஸ்டர் ஒட்டி வாழ்த்துவது என்பது கட்சிகளின் கலாச்சாரமாகி விட்டது.  எழுத்துக்கள் அதிமுக என்றால் கருப்பு, வெள்ளை, சிகப்பு என மூவண்ணத்திலும் தி மு க என்றால் கருப்பு சிவப்பு என இரு வண்னத்திலும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அதே போல் எழுத்துப் பிழைகளும் ஏராளமாக இந்த போஸ்டர்களில் தென்படும்.

ஆனால் சமீபத்தில் அ தி மு க வினரால் மதுரையில் முதல்வர் பழனிச்சாமியை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டரில் எழுத்துக்கள் தி மு க வின் நிறமான கருப்பு சிவப்பில் அச்சிடப்பட்டிருப்பது தொண்டர்கள் இடையில் குழப்பத்தையும்,  பார்ப்பவர்கள் இடையில் நகைப்பையும் உருவாக்கியது/