விஷால் என்ன சாதித்தார் என்பது அனைவருக்கும் தெரியும் : உதயா

 

வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. பைனான்ஸ் சிக்கலைத் தாண்டி இன்று (மே 11) வெளியாகியுள்ளது அதே நேரத்தில் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருடைய படங்களின் பிரச்சினை தொடர்பாக பேசிய விஷால் “படம் நன்றாக இல்லை. எனும் போது நான் எப்படி திரையரங்கு உரிமையாளர்களை 2 வாரங்கள் ஒட்டுங்கள் என்று நிர்பந்திக்க முடியும்” என கூறியுள்ளார்.

இது ‘உத்தரவு மகாராஜா’ படத்தில் நாயகனாக நடித்து, தயாரித்த உதயாவை மிகவும் கோபப்படுத்தியது.

நான் கண்மூடித்தனமான விமர்சனங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. அந்தப் பேரிடருக்கு வழிவகுத்ததே விஷால் தான். இதற்கு நான் எனது ஆயுள் உள்ளவரை நன்றியுள்ளவனாக இருப்பேன். ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாகவோ அல்லது இன்னபிற நோக்கங்களுக்காவோ இருக்கக் கூடாது. ஒரு பொறுப்புள்ள உயர் பதவியில் இருக்கும் விஷால் என்ன சாதித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும் . சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. ‘விதைத்ததை மட்டுமே அறுக்க முடியும்’ என்ற எளிய பிரபஞ்ச விதியை நான் நம்புகிறேன்.

’அயோக்யா’ படம் வெற்றி பெற எனது ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள். இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்”. என் அக்கூறியுள்ளார்.