ஆர்.கே. டிஜிட்டல் மீடியா  சார்பில் தயாரிப்பாளர் சி.ராஜ்குமார் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘உத்ரா’.

இந்தப் படத்தில் விஸ்வா, விவாந்த், ரக்சா, ரோஷிணி, சினேகா நாயர் ஐந்து பேரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கவுசல்யா, தவசி, மெர்சல் சீனி, அமர் செளத்ரி மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

திரைக்கதை, இயக்கம் – நவீன் கிருஷ்ணா, ஒளிப்பதிவு – ஏ.ரமேஷ், படத் தொகுப்பு – அஹமத், இசை – சாய் வி.தேவ், வசனம் – டி.ஜெ.குமார், நடன இயக்கம் – ராதிகா, சண்டை இயக்கம் – கில்லி சேகர், ஒலி வடிவமைப்பு – ஐயப்பன், கிராபிக்ஸ் – ஜெ.ஜீ ஸ்டூடியோ.

படத்தின் இயக்குநரான நவீன் கிருஷ்ணா இதற்கு முன்பாக ‘உச்சக்கட்டம்’, ‘நெல்லை சந்திப்பு’ ஆகிய இரு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

படம் குறித்து  பேசிய இயக்குநர் நவீன் கிருஷ்ணா, “வட்டப்பாறை என்கிற கிராமத்திற்கு தங்களது கல்லூரி புரொஜக்ட் வொர்க்குக்காக செல்கிறது “காலேஜ் ஜோடிகள்”.

மின்சாரமே இல்லாத அந்த கிராமத்தில் மக்கள் பீதியுடன் வாழ்கிறார்கள். அங்கு யாருக்காவது  திருமணம் நடந்தால்  அந்த புதுமண ஜோடி அமானுஷ்ய சக்தியால் கொல்லப்படுகிறது.

இதனால் அங்கு கடந்த பல வருடங்களாக திருமணங்களே நடப்பதில்லை.

இதை மூட நம்பிக்கை என கல்லூரி ஜோடிகள் நிரூபிக்க தங்களுக்குள் ஒரு ஜோடியை திருமணம் செய்வது போல் நாடகமாடுகிறார்கள். தங்களுக்கு எதுவும் நேரவில்லை என அந்த ஊர் மக்களுக்கு நம்பிக்கை யூட்டுகிறார்கள்.

அதை நம்பிய கிராமத்து மக்கள் தங்கள் ஊர் ஜோடி ஒன்றுக்கு திருமணம் செய்து வைக்க,. அந்த புது கணவன், மனைவி ஜோடி அன்றிரவே ஒரு அமானுஷ்ய சக்தியால் கொல்லப்படுகிறார்கள்.

இந்தக் கொலைகளை செய்தது யார்.. காரணம் என்ன என்று துப்பறிகிறாரக்ள் காலேஜ் ஜோடிகள்” என்று திகிலூட்டுகிறார் இயக்குநர் நவீன் கிருஷ்ணா.