ரித்வார்

த்தரகாண்ட் மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பசுமை வரி விதிக்க அம்மாநில அரசு உத்தேசித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பல புண்ணிய தலங்கள் உள்ளன. அத்துடன் கோடையில் விடுமுறையை கழிக்க பல மலைவாழ் பிரதேசங்களும் உள்ளன. அத்துடன் இயற்கை எழில் கொஞ்சும் இமயமலை அடிவாரத்தில் பலர் திருமனம் செய்துக் கொள்ள விரும்புகின்றனர். இதனால் இந்த மாநிலத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாக உள்ளது.

இந்த சுற்றுலாப்பயணிகளின் வருகையால் சுற்றுச் சூழல் பெருமளவில் மாசு அடைவதாக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் நடந்த மோசடி மன்னன் குப்தா விட்டின் திருமணத்தில் ஏராளமான குப்பைகள் சேர்ந்ததால் அதை எடுக்க பல தொழிலாளர்கள் தேவைப்பட்டது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்த குப்பைகளை அள்ல மட்டும் சுமார் ஒரு வார காலம் ஆனது.

இவ்வாறு மாநிலம் மாசு படுவதை தடுக்கவும், அந்த செலவுகளை ஈடுகட்டவும் உத்தரகாண்ட் மாநில சுற்றுச்சுழல் பாதுகாப்புத் துறை மற்றும் மாசு கட்டுப்படு வாரியம் இணைந்து ஒரு திட்டம் தீட்டி உள்ளது அதனபடி உத்திரப் பிரதேச மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளிடம் பசுமை வரி வசூலிக்க உத்தேசிக்கபட்டது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததால் விரைவில் இந்த வரி விதிப்பு அமுலுக்கு வர உள்ளது.