தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா

தெலுங்கானா:

தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம்குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து அவர் காங்கிரஸ் கமிட்டிக்கு எழுதியுள்ள கடித்ததில், கிரேட்டர் தேர்தலில் தோல்விக்கு தான் காரணம் என்றும் அதனால் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் உத்தரம் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கிரேட்டரில் சமீபத்திய தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களை மட்டுமே வென்றது. உப்பல் மற்றும் ஏ.எஸ்.ரவுநகரில் இரண்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

உத்தம் குமார் ரெட்டி, கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வந்தார். இதுமட்டுமின்றி அவர் தற்போது மக்களவையில் நல்லகொண்ட நாடாளுமன்றத் தொகுதிக்காக குரல் கொடுத்து வருகிறார். இருப்பினும், அவர் சில காலமாக கட்சி தலைவர் பதவியில் அதிருப்தி அடைந்துள்ளார். தொடர்ச்சியான தோல்வியை சந்தித்துள்ளதால், கட்சி பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.