லக்னோ,

.பி.யில் 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்த  உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் எந்த கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என்பது இன்று பிற்பகலில் தெரிய வரும்.

தற்போதைய நிலவரப்படி பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 16 மேயர் பதவிகளுக்கான தேர்தலில் 13 இடங்களில் பாஜகவே முன்னிலை வகித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதற்கான  தேர்தல்,  கடந்த 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 52.59 சதவீதம் வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 49.3 சதவீதம் வாக்குகளும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 53 சதவீதம் வாக்குகளும் பதிவானது.

இந்நிலையில், உ.பி.யில் மூன்று கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும்செய்யப்பட்டு உள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்மந்திரியாக பாஜக  யோகி ஆதித்யநாத் பதவியேற்றதற்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்  நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.