பாஜக.வுக்கு பிரசாரம் செய்ய விருப்பம்….ஐபிஎஸ் அதிகாரி அதிரடி

லக்னோ:

பாஜக.வுக்கு பிரசாரம் செய்ய விரும்புவதாக உத்தரபிரதேச ஐபிஎஸ் அதிகாரி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி அதிரடித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஊர்க்காவல்படை டிஜிபி ஆக இருப்பவர் சூர்ய குமார் சுக்லா. அயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டும் என இவர் கூட்டம் ஒன்றில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறவுள்ளார். சுக்லாவுக்கு பணி நீட்டிப்பு கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சுக்லா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,‘‘பணி ஓய்வுக்கு பின்னர் கிடைக்கும் பென்சன் எனது குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கும். அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பப்படுகிறேன். எனவே, மாநில அரசில் காலியாக இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் போன்ற பதவிகளில் என்னை நியமிக்க வேண்டும். நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்ட கலெக்டர் ஓ.பி.சவுத்தரி பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்துள்ளார். தற்போது மற்றொரு அதிகாரி இவ்வாறு கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.