லக்னோ:

உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று முதல் அமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றார். பா.ஜ ஆட்சி அமைந்த பின்னர் இன்று சட்டமன்ற கூட்டம் நடந்தது. முதல் கூட்டு கூட்டத்தில் கவர்னர் ராம்நாயக் உரையாற்றினார்.

சட்டசபை நிகழ்ச்சிகள் தூர்தர்ஷன் டிவி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கூட்டத்தில், சட்டம் -ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
அப்போது கவர்னர் ராம்நாயக்கின் மீது காகித பந்துகள் வீசப்பட்டன. ஜிஎஸ்டி மசோதா ஏற்கனவே பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிவிட்டது.

தற்போது மாநிலங்களில் நிறைவேற்றப்பட உள்ளது. ஏற்கனவே மாநிலத்தில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துவிட்டார். மாநில சட்டசபையில் இன்று ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் குறட்டைவிட்டு தூங்கினர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் வெளியானது. இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. முதல் கூட்டமே குறட்டையிலா என பேஸ்புக்க உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.