உத்தரபிரதேச பாலியல் வழக்கு: பாஜக எம்எல்ஏ சகோதரர் மீது சிபிஐ வழக்கு

லக்னோ:

2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் உத்தரபிரதேசம் உன்னாவ் மாவட்டம் பெங்கர்மாவ் தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் முதல்வர் யோகி வீட்டின் முன்பு தற்கொலை முயற்சி மேற்கொண்டார். அவரது தந்தை எம்எல்ஏ.வின் சகோதரர் அதுல் சிங் செங்காருடன் நடந்த சண்டையை தொடர்ந்து போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.

போலீஸ் காவலில் இருந்த பெண்ணின் தந்தை மர்மமான முறையில் மறுநாள் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பெண்ணின் தந்தையை தாக்கியதாக அதுல் செங்கார் மற்றும் 4 பேரையும் உடனடியாக கைது செய்தனர். அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் பெண்ணின் தந்தை இறந்தது தொடர்பாக 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் எம்எல்ஏ.வின் சகோதரர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ச