சீனாவில் இருந்து ரேஷன் வாங்க கட்டாயப்படுத்தப்படுகிறோம்: உத்தரகாண்ட் எல்லை கிராமவாசிகள் புகார்

உத்தரகண்ட்:

த்தரகாண்ட் எல்லை பகுதியில் வசித்து வரும் 7 கிராமங்களை சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் சீனாவில் ரேஷன் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகண்டின் பியாஸ் பள்ளத்தாக்கின் ஏழு கிராமங்கள் சீனாவின்  ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த கிராமங்க ளுக்கு தேவையான பொருட்கள் தேவைய அளவு கிடைக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான  உப்பு, சமையல் எண்ணெய், அரிசி மற்றும் கோதுமை போன்ற அடிப்படை உணவு தேவைகளுக்கு அவர்கள் நேபாளம் வழியாக சீனாவுக்கு சென்றுதான் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்டின் எல்லைப்பகுதி கிராமங்களான  பூந்தி, குஞ்சி, குடி, நபால், நபி, கார்பாங் மற்றும் ரொங்கோங் ஆகிய ஏழு கிராமங்கள், தங்களுக்கு  அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரேஷன் ஒதுக்கீடு போதாது என்று கூறி வருகின்றனர்.

இந்தியா சீனாவுக்கு இடையே எல்லை பகுதியில் உரசல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருவதால்,  லிபுலேக் பாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி களில் வசித்து வரும் கிராம மக்கள் தங்களது தேவைகளுக்காக  அரசாங்க அதிகாரிகளை அடைய முடியவில்லை என்று தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க சீனாவுக்கு செல்ல கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த லிபலுக் பாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் இருகு அணுகு சாலை இரு நாட்டு எல்லையுடன் இணைக்கிறது. இந்த சாலை கடந்த 2017ம் ஆண்டு இந்தியா சீனா இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அழிக்கப்பட்டது. தற்போது  ராணுவத்தின் எல்லைப் போக்குவரத்து அமைப்பு (பி.ஆர்) சாலையை மறுசீரமைத்து வருகிறது. ஆனால், அது போக்குவரத்துக்கு சாதகமாக இல்லை என்று கிராம மக்கள் கூறி வருகின்றனர்.

மேலும், தாங்கள் பொருட்கள் வாங்க சந்தைக்கு செல்ல சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியதிருப்ப தால், தங்களுக்கு சாலை பிரச்சினை காரணமாக கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

எங்களுக்கு ரேஷன் பொருட்களை சரியாக சப்ளை செய்யப்படாததால் நாங்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ள அந்த மக்கள்,  அங்கு வசிக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கையைப் போதிய அளவு உணவு பொருட்கள் வழங்குவதில்லை.

அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இரண்டு கிலோ அரிசி மற்றும் ஐந்து கிலோ கோதுமை ஆகிய வற்றை பொது விநியோக முறை (PDS) கீழ் வழங்குகிறது. இது குடும்பங்களுக்கு போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

தாங்கள் இந்தியாவில் வாழ்ந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு முக்கிய எல்லை பகுதியில் அமைந்திருப்பதால்,  நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் அநாதைகளாக வாழ்கிறோம் என்று கூறுகின்றனர்.

‘இதற்கிடையில், கிராமங்களில் அமைந்துள்ள பித்தோராகர் மாவட்ட நீதிபதி, சாலைகள் வசதி இல்லாததால், இந்த பிரச்சினை நீடித்து வருவதாகவும், இந்த கிராமங்களுக்கு ரேஷன் சப்ளைகளை வழங்குவதற்காக ஹெலிகாப்டர் சேவையை விரிவுபடுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் கூறி உள்ளார்.