உத்தரகாண்ட்: 700 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 13 பேர் பலி

டேராடூன்:
உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து 13 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் கார்ஜ் பள்ளத்தாக்கின் மேற் பகுதியில் ஒரு வேன் இன்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வேன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 700 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இதையடுத்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேனில் பயணம் செய்தவர்களில் 13 பேர் உயிரிழந்தனர். இரு சிறுமிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளத்தாக்கில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

புகைப்படம் உதவி ஏஎன்ஐ: நன்றி