சர்ச்சையில் சிக்கிய பதஞ்சலி நிறுவனம்: கொரோனா மருந்துக்கு உரிமம் தரவில்லை என ஆயுஷ் அமைச்சகம் நோட்டீஸ்

டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரகண்ட் ஆயுஷ் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

உத்தரகாண்டில் செயல்பட்டு வரும் பாபா ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தது. கொரோனானில் மற்றும் ஸ்வாசரி என்ற பெயர் கொண்ட அந்த மருந்துகள், கொரோனாவை 7 நாட்களில் குணப்படுத்தும் என்று பதஞ்சலி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. இந் நிலையில், இந்த மருந்துகளின் விளம்பரத்தை அறிந்த உத்தரகண்ட் ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதஞ்சலிக்கு வழங்கப்பட்ட உரிமம் கொரோனா வைரசக்கா மருந்தை கண்டுபிடித்தற்கான அல்ல, நோய் திர்ப்பு சக்தி பூஸ்டர் கருவிகள் மற்றும் காய்ச்சல் மருந்து உற்பத்திக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது என்று கூறி உள்ளது.

இது குறித்து உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநில மருத்துவ உரிம ஆணையத்தின் இணை இயக்குநர் டாக்டர் ஒய்.எஸ். ராவத் கூறியதாவது:  கொரோனா தொடர்பான எந்தவொரு மருந்தின் உரிமத்திற்கும் திவ்யா பார்மசி விண்ணப்பிக்கவில்லை, இது தொடர்பாக அவர்களுக்கு எந்த உரிமமும் வழங்கப்படவில்லை.

நோய் எதிர்ப்பு மருந்து என்று மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா மருந்து என்று அவர்கள் விளம்பரப்படுத்தி உள்ளது, இப்போது அது ஆயுஷ் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. திவ்யா பார்மசிக்கு ஒரு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர்களின் பதில் திருப்திகரமாக இல்லை என்றால் பின்னர் அவர்களின் தற்போதைய உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றார்.