கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினார் உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர ராவத்..!

உத்தரகண்ட்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர ராவத் குணமடைந்துள்ளார்.

உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்துக்கு டிசம்பர் 18ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

ஆனால் காய்ச்சல் அதிகமானதால் டேராடூன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 28ம் தேதி மருத்துவா்களின் ஆலோசனைபடி  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட திரிவேந்திர ராவத் இன்று வீடு திரும்பி உள்ளார். தொடர்ந்து ராவத் வீட்டிலேயே சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வார் என்று தெரிகிறது.