உத்தரகாண்ட் அமைச்சருக்கு கொரோனா- தனிமைப்படுத்தப்பட்ட முதலமைச்சர்…

உத்தரகாண்ட்:
த்தரகாண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநில முதலமைச்சர் உள்பட சில அமைச்சர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநில அமைச்சர் சத்பால் மகாராஜ், இவருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினர் உள்பட 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதைடுத்து உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் சில அமைச்சர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ராவத் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் மகாராஜ் கலந்து கொண்டார். இந்நிலையில், அமைச்சர் சத்பால் மகாராஜ் உள்பட அவரது குடும்பத்தினர்  22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்களையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஜே சி பாண்டே தெரிவித்துள்ளதாக மாநில நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மதன் கவுசிக் தெரிவித்துள்ளார்.