முதல்வர் மனைவி : 22 வருடங்களாக இட மாற்றம் செய்யப்படாத ஆசிரியை 

டேராடூன்

சிரியையாக பணி புரியும் உத்தரகாண்ட் முதல்வரின் மனைவி கடந்த 22 வருடங்களாக பணியிட மாற்றம் செய்யப்படாமல் உள்ளார்.

உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ரவத்.   இவர் சமீபத்தில் நடந்த ஒரு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.  அப்போது பள்ளி முதவரான உத்ரா பகுகுணா என்பவர் தாம் 25 வருடங்களாக கிராமப் புறங்களில் பணியாற்றி வருவதாகவும் தமக்கு இட மாறுதல் தேவை எனவும் கோரினார்.   அந்த கோரிக்கையை முதல்வர் நிராகரித்தார்.   அதனால் கோபம் அடைந்த உத்ராவை முதல்வர் கைது செய்ய உத்தரவிட்டு பணியிடை நீக்கம் செய்தார்.

தற்போது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் படி முதல்வர் ரவத்தின் மனைவி சுனிதா ரவத் ஒரு ஆசிரியை என்பதும் கடந்த 22 வருடங்களாக அவர் டேராடூன் நகரில் இட மாற்றம் செய்யப்படாமல் பணியில் உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.  இந்த தகவல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்ராவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

உத்ரா இது குறித்து, “என்னைப்  போன்ற ஏழை ஆசிரியைகள் மட்டுமே துயருறுகிறோம்.  என கணவர் மரணத்தால் நான் பணியை விட முடியாத நிலையில் உள்ளேன்.   ஆனால் அனைத்து வசதிகளையும் கொண்ட  சுனிதா நகரில் 22 வருடங்களாக இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளார்.  நான் இது குறித்து எனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றத்தை அணுக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.