பேரிடரில் மக்களை மீட்க கட்டணம் வசூலிக்கும் பாஜக அரசு

டேராடூன்,  உத்தர காண்ட்

பேரிடர் சமயத்தில் மீட்புப் பணியின் போது ஹெலிகாப்டரில் காப்பாற்றப்படும் பயனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் வெள்ளம் போன்ற பேரிடரில் பல மக்கள் சிக்கிக் கொள்கின்றனர்..   அவ்வாறு சிக்கிக் கொண்டவர்களை சுற்றிலும் நீர் சூழ்ந்திருப்பதால் வான் வழியாக மற்றுமே மீட்க வழி உண்டு.   அதற்கு மாநில அரசின்  ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப் படுகின்றன.    அனைத்து மாநில அரசுகளும் இதை மக்களுக்கு செய்யும் இலவச சேவையாக செய்து வருகின்றன.

அதிக அளவில் வெள்ள அபாயம் ஏற்படும் மாநிலங்களில் உத்தரகாண்ட் மாநிலமும் ஒன்றாகும்.   தற்போது அம்மாநில சிவில் விமான போக்குவரத்துத் துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதில், “பேரிடர் ஏற்படும் சமயங்களில் மீட்புப் பணியில் ஈடுபடும் ஹெலிகாப்டர்களை உபயோகிக்க மக்கள் கட்டணமாக தலைக்கு ரூ. 3100 செலுத்த வேண்டும்” என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஒப்புதல் அளித்துள்ளார்.   அதனால் இந்த அறிவிப்பு உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.

மீட்புப் பணிக்காக மக்களிடம் அரசு கட்டணம் வசூலிப்பது இதுவே முதல் முறையாகும்.