உத்தரகாண்ட் டாக்டர்கள் மருந்து சீட்டு எழுத தடை….கம்ப்யூட்டர் மூலம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டேராடூன்:

உத்தரகாண்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் கம்ப்யூட்டர் மூலம் மருந்து சீட்டுக்கள் தர வேண்டும். கையால் எழுதி கொடுக்க என்று அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த ஒரு வழக்கு உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை கையால் எழுதி தருகின்றனர். இதனால், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் பல சந்தர்ப்பங்களில் கையெழுத்து புரியாமல் தவிக்கின்றனர்.

இதை தவிர்க்கும் வகையில் உத்தரகண்டை சேர்ந்த அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் இனி மருந்து சீட்டுகளை கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களாக வழங்க வேண்டும். அரசு டாக்டர்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் பிரின்டர் வசதிகளை அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Uttarakhand High Court banned doctors to write drugs should provide through computer print out, உத்தரகாண்ட் டாக்டர்கள் மருந்து சீட்டு எழுத தடை....கம்ப்யூட்டர் மூலம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
-=-