நைனிடால்,

உததர்காண்ட் உயர்நீதிமன்றம், எந்த ஒரு அரசியல் கட்சியோ, தனி நபர்களோ, ஊடகங்களோ, வாக்களிப்பு இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விமர்சிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது

உத்தர்காண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ரமேஷ் பாண்டே, அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வாக்களிப்பு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் அளித்துள்ளார்.  அந்த புகார் குமார் ஷர்மா, ராஜிவ் ஷர்மா ஆகிய இரு நீதிபதிகளின் அமர்வில் விசாரிக்கப்பட்டது.   விசாரணை முடிவில் அந்த புகாரை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது,

அந்த தீர்ப்பின் சாராம்சம் பின் வருமாறு:

தேர்தல் ஆணையத்துக்கு விதி எண் 324ன் படி தேர்தல் நடத்த முழு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.  அதன்படி வாக்களிப்பு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உண்டு.  ஆணையத்தின் எந்த ஒரு நடவடிக்கையையும் விமர்சிக்க அந்த விதியின் படி தடை விதிக்கப் பட்டுள்ளது.   தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பது நமது குடியரசின் இறையாண்மையையே விமர்சிப்பதாகும்.  அந்த உரிமை யாருக்கும் இல்லை.  பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவைகள் தேர்தல் ஆணையத்தை கட்டுப்படுத்தாது. என தேர்தல் ஆணையத்தின் உரிமையப் பற்றி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது

வாக்களிப்பு இயந்திரங்கள் எலெக்ட்ரானிக் கார்ப்பொரேஷன் என்னும் அரசு நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டவை.  அவைகளில் பயன்படுத்தப்படும் சிப் நமது உள்நாட்டு தயாரிப்பு.  அதை பரிசோதிக்க ஒத்துக் கொண்டது தேர்தல் ஆணையத்தின் தவறான, மற்றும் வேண்டாத முடிவு.  தேவையில்லாமல் ஆணையம் தானே போய் வேண்டாத சோதனைக்கு ஒத்துக் கொண்டது.  பரிசோதனை என்பது ஆணையத்தின் சொந்த முடிவு, ஆனால் அந்த பரிசோதனையின் முடிவு, எந்த ஒரு தேர்தலையும் பாதிக்காது என வாக்களிப்பு இயந்திரங்கள் பற்றி கூறி உள்ளது

சமீபத்தில் நடந்த  ஏழு மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பி ஜே பி கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றது.  இது வாக்களிப்பு இயந்திரத்தில் செய்யப்பட்ட மோசடி என பல அரசியல்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.  தேர்தல் ஆணையம் அப்படி எதுவும் நடைபெறவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் தவறை நிரூபிப்பதாகவும் சொன்னது.  இந்த பரிசோதனை அடுத்த வாரம் டில்லியின் நடைபெற உள்ளது.  இந்த நேரத்தில் வந்த இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறப்படுகிறது.