சஞ்சிவினி மூலிகையைக் கண்டுபிடிக்க உத்தரகாண்ட் அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

புராணக்கதையான ராமாயணத்தில், இராமரின் தம்பி லட்சுமணன் போரில் அடிபட்டிருக்கும்போது, ராமர் அனுமனிடம் இமயமலையில் உள்ள துரோணகிரி மலையில் உயிர்காக்கும் சஞ்ஜீவனி மூலிகை பறித்துவர சொல்லுவார். அந்த மூலிகை இரவில் மின்னும் தன்மை வாய்ந்தது என அடையாளமும் கூறுவார். அதனைக் கண்டுபிடிக்கமுடியாத அனுமன், துரோணகிரி மலையையே தூக்கிவந்து லட்சுமணன் உயிர்காக்க உதவியதாகக் கதை உண்டு.
உத்தரகாண்ட் மாநில அரசு தற்போது அந்த மூலிகையைக் கண்டுபிடிக்க 25  கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.hanuman_sanjeevani1
அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ” சஞ்சீவனி மூலிகை உயிர் காக்கும் சக்தி கொண்டது. அதனைக் கண்டுபிடித்தால் மக்கள் உடல்நலன் காக்கப்படும். ஆகஸ்ட் மாதம் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் மூலிகை வேட்டையை துவக்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.himalaya surendra negi

உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்று வருகின்றது.
இந்த மூலிகையைக் கண்டுபிடிக்க மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டது. ஆனால் மத்திய அரசு நிதியுதவி அளிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து, உத்தரகாண்ட் மாநில மாற்று சிகிச்சைத் துறையின் நிதியினை சஞ்சீவனி மூலிகையைக் கண்டுபிடிக்க ஒதுக்கியுள்ளது அரசு.