உத்தவ் தாக்கரே மராட்டிய முதல்வராகிறார்– சமீப செய்தி!

மும்பை:  மராட்டிய மாநிலத்தின் புதிய முதல்வராக உத்தவ் தாக்கரேயை சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம் எல் ஏக்கள் தேர்வு செய்துள்ளது, அங்கு நிகழ்ந்து வரும் அரசியல் பரபரப்பின் அடுத்த நகர்வாகியுள்ளது.

சுவாராஸ்யத்திற்கு சிறிதும் பஞ்சமில்லாத மராட்டிய அரசியல் திருப்பங்களில் இன்னொன்றாக 162 எம் எல் ஏக்களின் அணிவகுப்பை காண்பித்த சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்கும் கட்டத்தை தற்போது அடைந்துள்ளது.

வரும் டிசம்பர் 1 ஆம் தேதி பதவியேற்பு விழா நிகழுமென செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த சூழலில் தான் தேவேந்திர ஃபட்நாவிஸும் அஜித் பவாரும் தங்களது ட்விட்டர் கணக்கின் பயோவை மாற்றம் செய்தனர்.

ஏற்கெனவே தேவெந்திர ஃபட்நாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் அடுத்தடுத்து மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருந்த அரசியல் சூழல் அங்கு ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது.