மருத்துவ உபயோகத்துக்கு கஞ்சா பயிரிட உ.பி. அரசு அனுமதி

க்னோ

த்திரப் பிரதேச பாஜக அரசு மருத்துவ உபயோகத்துக்காக கஞ்சா பயிரிட விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கரும்பு விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. ஆனால் அந்த அளவுக்கு கரும்பு வர்த்தகம் நடைபெறுவதில்லை. அதனால் பல வருடங்களாக கரும்பு விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

எனவே மாற்று ஏற்பாடுகளை உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகியின் பாஜக அரசு செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாநில அரசு ஜப்பான் நாட்டுடன் மீன்வளம் மற்றும் வனத்துறை பொருட்கள் வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் இட்டுள்ளது.

இந்நிலையில் சணல் பயிருக்கு ஊடுபயிராக விவசாயிகள் மருத்துவ உபயோகத்துக்காக கஞ்சா பயிரிடலாம் என அனுமதி அளித்துள்ளது. இதற்காக குறைந்த அளவில் போதை தன்மை நிறைந்த கஞ்சாவை விவசாயிகள் பயிரிடலாம் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் எனவும் அரசு கூறி உள்ளது.

விவசாயிகள் அரசின் இந்த திட்டத்துக்கு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சணல் பயிரிட்டு தொழில் துறையையும் கஞ்சா பயிரிட்டு மருத்துவத் துறையையும் முன்னேற்ற தங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.