நைனிடால்

ரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதி செய்துக் கொடுத்த பின் அரசு அதிகாரிகளுக்கு வசதி செய்ய வேண்டும் என உத்தரகாண்ட் உயர் நீதி மன்றம் கூறியுள்ளது.

சமீபத்தில் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது

பல அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளே இன்னும் தரப்படவில்லை.  அதாவது 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு செட் சீருடை, சத்துணவு, கழிப்பறை, புத்தகங்கள், காற்றாடி, போதிய மின் விளக்குகள்,  அவ்வளவு ஏன், சரியான கரும்பலகை கூட கிடையாது. எனவே இன்னும் ஆறு மாதங்களுக்கும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இந்த வசதிகள் செய்துத் தரப்படவேண்டும்.

அதுவரை அரசு அதிகாரிகளுக்கு, வாகனங்கள், குளிர்சாதனக்கள், கைபேசிகள் ஆகிய எந்த ஒரு வசதியும் அரசு நிதியிலிருந்து அளிக்கக்கூடாது.  மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு உயர்நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை உத்தர்காண்டி மட்டுமின்றி தமிழ்நாடு போன்ற மாநில அரசுகள் பின்பற்றுமா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.