சென்னை:

விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் உழவன் என்ற  மொபைல் செயலி (Mobile App) செயல்பாட்டினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு தகவல்களை வழங்கி உதவும் வகையில் உழவன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்,  இந்த  செயலியின் மூலமாக, வேளாண் தகவல்கள் விவசாயிகளை விரைவில் சென்றடையும் வகையில்  தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்த செயலி வாயிலாக,  பயிர் காப்பீடு, மானிய விவரங்கள், விளை பொருட்களின் சந்தை விலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ளலாம் என்றும், அதுபோல  4 நாட்களுக்கான வானிலை நிலவரங்களையும் விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. மொபைல் செயலியை இயக்கி தொடங்கி வைத்த முதல்வர், மகசூல் பெருக்கும் மலிவு விலை உரமான அம்மா உரத்தை விவசாயிகளுக்கு  வழங்கினார். மேலும், வாடகைக்கு விட விவசாய கருவிகள், இயந்திரங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.