கல்வியாளர் வி.சி. குழந்தைசாமி மறைவு

ண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.சி. குழந்தைசாமி சென்னையில் காலமானார். அழருக்கு வயது 77.

கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த இவர், இந்திய பொறியியல் (நீரியல்துறை) அறிஞராவார்.   கல்வியாளரும் கவிஞரும் எழுத்தாளரும்கூட.

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார்.  நீர்வளத்துறையில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இவர் உலக அளவில் நீர்வளத்துறையில் பல குறிப்பிடத்தக்க பதவிகள் வகித்துள்ளார். பல ஆய்வுக்குழுக்களிலும், திட்டக்குழுக்களிலும் பங்கேற்றுள்ளார். பொறியியல் கல்வியில் ஆர்வம் கொண்ட இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.

இவரது உடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முகவரி:

கதவு எண் 53,  எம்,ஜி.ஆர் சாலை,  கலாசேத்ரா காலனி, பெசன்ட் நகர், சென்னை:

தொடர்பு எண் : 9789433344