ஓடிடி தளத்தில் நானியின் ‘வி’ திரைப்பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு…..!ஓடிடி தளத்தில் நானியின் ‘வி’ திரைப்பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு…..!
மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வி’.
நானி முதன்முறையாக வில்லனாக நடித்துள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது .
பலமுறை ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியான போது படக்குழு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் ‘வி’ படத்தின் உரிமையைப் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது.
V is coming home ❤️
September 5th.. The Hunt is On!@PrimeVideoIN #VOnPrime pic.twitter.com/28Lpb21RuE
— Nani (@NameisNani) August 20, 2020
இந்நிலையில் தனது 25-வது படம் ஓடிடியில் வெளியாவது குறித்து நானி, “கடந்த 12 ஆண்டுகளாக எனது படங்களைக் காண டிக்கெட்கள் எடுத்து திரையரங்கிற்கு வந்தீர்கள். இப்போது நான் உங்களுடைய வீட்டிற்கே வந்து நன்றி கூறவுள்ளேன். எனது ‘வி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.