இந்தியாவிலேயே அமைதிப் பிரதேசமான காஷ்மீர் வாருங்கள்!: வி.கே.டி. பாலன்

காஷ்மீர் என்றாலமே மனதுக்குள் குண்டு சத்தம் கேட்கும் என்பதுதான் நமது மனநிலை. ஆனால், அது தவறு என்கிறார், சமீபத்தில் அங்கு சென்று வந்த பிரபல சுற்றுலா முகவர் வி.கே.டி. பாலன்.

இதோ அவரது முகநூல் பதிவு:

“கடந்த டிசம்பர் 8ம் தேதி காஷ்மீர் சென்றிருந்தேன்.கடும் குளிர் ,கதர் சட்டை இதமாகவே இருந்தது.சுற்றுலா முகவர்கள் மற்றும் காஷ்மீர் அரசு சுற்றுலா துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள்.
காஷ்மீர் ஶ்ரீநகர் டால் ஏரி அருகில் ANI tv,Doordarshan tv க்கள் காஷ்மீர் சுற்றுலாவைப்பற்றி என்னிடம் ஆங்கிலத்தில் பேட்டி கண்டன.சில உள்ளூர் பத்திரிகைகளும் பேட்டி கண்டன.

காஷ்மீரைப் போன்ற அழகான அமைதியான பிரதேசம் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே கிடையாது. எல்லா இடங்களிலும்ட உள்ளது போலவே இங்கும் சில சல சலப்புகள் அதுவும் அண்டை நாடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மாத்திரமே.மீடியாக்களும்,பத்திரிகைகளுமே தீவிரவாதம் பயங்கரவாதம் என ஊதி பெரிது படுத்துகின்றன.

தால் ஏரிக் கரையில் வி.கே.டி. பாலன்

ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களில் நடக்கும் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றப் புள்ளி விபரங்களை ஒப்பிட்டால்…  காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை.

இந்தியர்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என நினைவு வந்தால், அவர்களுக்கு உடனடியாக  நினைவுக்கு  வர வேண்டிய இடம் காஷ்மீர் என்பதாகவே இருக்க வேண்டும்.  எதிர்வரும் டிசம்பர் 26ம் தேதி காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்மூப் அம்மையாரும்,காஷ்மீர் சுற்றுலா அமைச்சர் மற்றும் காஷ்மீர் ஹோட்டல்களின் பிரதிநிதிகள், சுற்றுலா முகவர்கள் சென்னைக்கு வருகை தர உள்ளார்கள். “காஷ்மீருக்கு வாருங்கள்” என அழைக்கும் கூட்டமும்,பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடைபெற உள்ளது. இவ் ஏற்பாடுகளை செய்ய காஷ்மீர் சுற்றுலாத்துறை என்னை பணித்துள்ளது!” என்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார் வி.கே.டி. பாலன்.

You may have missed