மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வி’.

நானி முதன்முறையாக வில்லனாக நடித்துள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது .

பலமுறை ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியான போது படக்குழு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் ‘வி’ படத்தின் உரிமையைப் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது.செப்டம்பர் 5-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

தற்போது நானி நடித்துள்ள வி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.