டிக்-டாக் ட்ரெண்டிங்கில் ஷில்பா ஷெட்டியின் ‘வாத்தி கம்மிங்’ டான்ஸ்….!

--

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த படம் கொரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது .

இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது டிக்-டாக் பக்கத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டிருந்தார்.

கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ இதுவரை 19.7 மில்லியன் பார்வைகளைப் பெற்று ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. மேலும் 1.9 மில்லியன் லைக்ஸ்கள் குவிந்துள்ளன.