நோய்தடுப்பு மருந்து உற்பத்தி மையங்கள் செயல்படுவது எப்போது?

சென்னை: தமிழக தலைநகரிலுள்ள பிசிஜி ஆய்வகம் மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள இந்திய பேஸ்டர் இன்ஸ்டிட்யூட் ஆகிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மூடப்பட்டு பத்தாண்டுகள் ஆன பிறகும், இன்னும் செயல்பாட்டிற்கு வர முடியாமல் இருக்கின்றன.

அங்கே, காசநோய்க்கான தடுப்பு மருந்து மற்றும் தொண்டை அழற்சி நோய்க்கான தடுப்பு மருந்து ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, கடந்த 2018ம் ஆண்டில் சென்னை அருகே செங்கல்பட்டில் திறக்கப்பட்ட உயர்தொழில்நுட்பம் வாய்ந்த தடுப்பு மருந்து பூங்கா, மத்திய அரசின் நிதிக்காக இன்னும் காத்துக்கொண்டுள்ளது. இந்தப் பூங்காவானது, மத்திய அரசின் சர்வதேச நோய் தடுப்பு திட்டத்திற்காக, தடுப்பு மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 50% வரை விலை குறைக்கப்பட்டிருந்தாலும், தடுப்பு மருந்து தயாரிப்பானது, நாட்டின் தேவையில் நான்கில் மூன்று பங்கை (குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக) நிறைவுசெய்ய வேண்டியிருந்தது. இந்தப் பூங்கா ஒருமுறை செயல்பாட்டிற்கு வந்துவிட்டால், அங்கே 500 மில்லியன் டோஸ் அளவுக்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

கார்ட்டூன் கேலரி