வடசென்னை 2 உருவாவது உறுதி என தனுஷ் அறிவிப்பு…!

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான வடசென்னை திரைப்படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் அசுரன் படத்தில் தனுஷ் வெற்றிமாறன் இணைந்ததால் வடசென்னை படத்தின் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின. இந்நிலையில், தனுஷ் ஒரு ட்வீட்டை பதிவிட்டு ரசிகர்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

“இந்தக் குழப்பம் ஏற்பட காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை 2-ம் பாகம் உருவாகும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் வடசென்னை படத்தின் 2-ம் பாகம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.