2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வடசென்னை’. முதல் பாகத்தின் முடிவிலேயே,இரண்டாம் பாகம் வரும் என்பது போல தெரிவித்திருந்தனர் .
இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் ‘வடசென்னை 2’ படத்தை எப்போது தொடங்குவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ‘வடசென்னை 2’ படத்துக்கு இன்னும் நேரமாகும். அதை ஒரு வெப்சீரிஸாக (இரண்டு சீஸன்களாக) எடுக்கலாமா என்ற யோசனையும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.